அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்!

Photo of author

By Vinoth

அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்!

Vinoth

அஜித் 61 படத்தின் தலைப்பு ’துணிவு’… இணையத்தில் வைரலாக பரவும் தகவல்!

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் படம் தற்போது வரை ‘அஜித் 61’ என அறிவிக்கப்பட்டு வருகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியானது. அன்று தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாள் என்பதால் அன்று வெளியாகும் என எதிர்பர்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அன்றைய தினம் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விரைவில் படக்குழு பாங்காங்கில் ஒரு மிகப்பெரிய ஆக்‌ஷன் சீக்வென்ஸை படமாக்க உள்ளது. அதற்காக படக்குழு தாய்லந்து சென்றுள்ள நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று முழுவதும் படத்துக்கு ‘துணிவே துணை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது.