சிகரெட் பழக்கத்தை விடும் படி ரோபோ சங்கருக்கு அறிவுறுத்திய அஜித்!! ஞாபகார்த்தமாக பாதுகாக்கப்படும் சிகரெட்!!

Photo of author

By Gayathri

நடிகர் அஜித்தின் உடைய துணிவு படத்திற்கு அடுத்து இரண்டு ஆண்டுகளாக இவருடைய எந்த படமும் திரைக்கு வராதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் அவர்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி என அடுத்தடுத்து இரண்டு படங்களை தமிழ் திரை உலகிற்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் கொடுக்க இருக்கிறார். இதனால் இன்ப வெள்ளத்தில் எப்பொழுது படம் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விடாமுயற்சி திரைப்படம் ஆனது வருகிற 2025 பொங்கல் அன்று திரையிடப்படும் என்று வடக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி திரைப்படமானது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரோபோ சங்கர் அவர்கள் நடிகர் அஜித்குமார் உடன் தனக்கு நடந்த உரையாடல் மற்றும் அன்றிலிருந்து தான் எடுத்த முடிவு என அனைத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடிகர் அஜித்குமாரை பற்றி ரோபோ ஷங்கர் அவர்கள் கூறியதாவது :-

ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் சிகரெட் பிடிப்பதற்காக தனியே சென்ற பொழுது தன்னை அழைத்த நடிகர் அஜித்குமார் அவர்கள், எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ரோபோ சங்கர் அவர்கள் நான் சிகரெட் பிடிக்க செல்கிறேன் சார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதற்கு அந்த சிகரெட்டை வாங்கிய நடிகர் அஜித்குமார் அவர்கள், ” நான் எப்படி எல்லாம் சிகரெட் பிடிப்பேன் தெரியுமா “என்று தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகூர்ந்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில் 8 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதோடு மட்டுமின்றி, நீங்களும் இந்த சிகரெட் பழக்கத்தினை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விடுங்கள் சங்கர் என்று ரோபோ சங்கர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் நடிகர் அஜித்குமார் அவர்கள்.

இதனை ரோபோ சங்கர் அவர்கள் தெரிவிக்கும் பொழுது, இன்றளவும் அவர் என்னிடம் வாங்கிப் பார்த்த சிகரட்டை நான் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் என்று சந்தோஷத்துடன் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.