இதை நோட் பண்ணுங்க.. விஜய் மாநாட்டில் அஜித் மற்றும் ரஜினி!! வெளியான முக்கிய அப்டேட்!!

0
368
Ajith and Rajini at Vijay conference!!
Ajith and Rajini at Vijay conference!!

TVK: தவெக மாநாட்டில் விஜய்க்கு அஜித் மற்றும் ரஜினி வாழ்த்து தெரிவித்த மடலை வாசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடானது நாளை தொடங்க உள்ளது. இதற்கான மருத்துவம் உள்ளிட்டவைகளின் ஏற்பாடுகள் தொண்டர்களுக்காக தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் அவ்வப்போது பல அறிவிப்புகளை தொண்டர்களின் பாதுகாப்பு நலன் கருதி வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக வாகனங்களில் வருவது தவிர்த்துக் கொள்ளுமாறும் பாதுகாப்பாக இருக்கும் படியும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் கொடுக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் மாநாட்டில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ளப் போகிறர்கள் என்பது குறித்து மிகப்பெரிய கேள்வி உள்ளது.

இதன் நடுவே திரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் தவெக கொடி போன்ற ஒரு நாட்டின் சின்னத்தை போட்டு தேன் குழல் முருக்கு-குடன் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதேபோல விஷாலும் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே பேசி வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் விக்ரவாண்டியில் விஜய் மற்றும் அஜித் இருக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது அடுத்த கட்ட ஆச்சரியமாக உள்ளது. இதை வைத்துப் பார்க்கையில் இந்த மாநாட்டிற்கு அஜித் ரசிகர்கள் வருகை இருக்கும் என தெரிய வருகிறது. இதனையெல்லாம் தவிர்த்து நடிகர் அஜித் மற்றும் ரஜினி உள்ளிட்டோர் இவர் கட்சி தொடங்கியது குறித்து வாழ்த்து செய்தி கூறியதை மேடையில் வாசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய ரசிகர்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்கும். இது கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல உதவிகரமானதாக இருக்கும்.

Previous articleவிஜய்-க்கு செய்த மிகப்பெரிய “துரோகம்” இதை மறக்க வாய்ப்பே இல்லை! தவெக தொண்டர்கள் ஆரவாரம்!
Next articleமீண்டும் வெடிக்கும் அடுத்த கட்ட போர்!! குண்டு மழை பொழிய காத்திருக்கும் இஸ்ரேல் மற்றும் ஈரான்!!