ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

0
138

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்த ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து, 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியலுக்கு நடிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கமலஹாசன் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு எந்த பெரிய நடிகரும் இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினி, அஜித் சந்திப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் அப்போது ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து அஜித் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அதே தேதி அதே நேரத்தில் அதே ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

ஒரே இடத்தில் ரஜினி, அஜித் படங்களின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால் இந்த படப்பிடிப்பின் இடையே ரஜினி-அஜித் சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் அப்போது இருவரும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் பல அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, அஜித் ஆகிய இருவரும் திரையுலகில் மாஸ் நடிகர்கள் என்பதால் அரசியலில் இருவரும் இணைந்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleவிண்ணில் பாய்ந்தது PSLV C-48 ராக்கெட்
Next articleசினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்