இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?

0
142

இன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பும் அஜித் நடிக்கவிருக்கும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை முதல் தொடங்குகிறது. இரண்டு படக்குழுவினரும் ஒரு சிறிய பூஜை நடத்திவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பு காட்சிகளை படமாக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ’வலிமை’ படத்திற்கான போடப்பட்ட செட் தயாராக இருப்பதாகவும் அதே போல் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்புக்கு உண்டான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்றே தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகியோர்களின் படப்பிடிப்புகள் ஒரே வளாகத்தில் நடப்பதால் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இன்று இல்லாவிட்டாலும் ஒருசில நாட்களில் இருவரின் சந்திப்பு நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் ஒருபுறம் அரசியல் கட்சி தொடங்கிய அரசியல் களத்தில் குதிக்க உள்ளது தெரிந்ததே. அதேபோல் அஜித்தை அரசியலில் இழுக்க அதிமுக கட்சி பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி-அஜித் சந்திப்பு நடந்தால் அந்த சந்திப்பால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஜினியை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துவிட்ட நிலையில் அஜித்தை இதுவரை எந்த கட்சியினர்களும் விமர்சனம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதிட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?
Next articleMP தேர்தலில் இழந்த வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் தந்திரமாக வாங்குமா பாமக?