மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட.. அஜித் மற்றும் உதயநிதி ..

Photo of author

By Gayathri

மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட.. அஜித் மற்றும் உதயநிதி ..

Gayathri

Ajith and Udayanidhi exchanged greetings..

அஜித் குமார்: தமிழ் திரை உலகில் “அல்டிமேட் ஸ்டார்” என்று அறியப்படும் இவர், “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், இவரது ரசிகர்கள் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக AK, தல, அல்டிமேட் ஸ்டார் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தற்போது சமூக வலைதளங்களில் “அஜித்தே, கடவுளே” என்ற வாசகத்தையும் டிரண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இவர் கார் பந்தயத்தில் ஈடுபடுவதை தனது விருப்பமாக வைத்துள்ளார்.

அஜித் அவர்கள் “பைக் லைசென்ஸ் முதல் பைலட் லைசன்ஸ்” வரை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் “புதிதாக கார் ரேசிங் அகாடமி” ஒன்றைத் தொடங்கியுள்ளார். கார் பந்தயத்திற்கு என ஒரு “தனி அணியையும் உருவாக்கி” அதற்கு அஜித் அவர்கள், “தலைமை கார் ஓட்டுநராகவும்” உள்ளார். கார் ரேசிங் செய்வதற்காக அஜித் அவர்கள் “புதிய காரையும்” வாங்கியுள்ளார். இந்த கார் அஜித் அவர்களின் மனைவி “ஷாலினி” அவர்கள் வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ரேசிங் அகாடமி தொடங்கிய அஜித்திற்கு தமிழ்நாடு “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இதற்கு தனது நன்றியை அஜித் அவர்களும் உதயநிதி அவர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” அவர்கள்களின் “47 வது பிறந்தநாளை” முன்னிட்டு “அஜித் குமார்” அவர்கள் தனது “பிறந்தநாள் வாழ்த்தை” உதயநிதி அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “விஜய்” அரசியலுக்கு வந்த நிலையில் அஜித்தும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மாரி மாரி வாழ்த்து தெரிவித்து கொள்வது பேசு பொருளாக மாறியுள்ளது.