வெங்கட் பிரபு பேரை சொன்னதும் கோபமான அஜித்!

0
280
#image_title

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்து வரும் படம் விடாமுயற்சி படபிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது.

 

துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை, மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி படம் மூலம் அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

 

இப்பொழுது இதைப்பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விடாமுயற்சியின் இயக்கத்திற்கு டைரக்டரை தேடி வந்த அஜித், வெங்கட் பிரபு பேரை சொன்னதும் கோபமாக ஆகி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

 

விடாமுயற்சி இயக்கத்திற்கு இயக்குனராக கே ஜி எஃப் இயக்குனர் வரை பேசலாம் என்று சென்றிருக்கின்றனர் . ஷாருக்கான் பட விஷ்ணு வர்தன் இயக்குனருடன் கூட பேச்சு நடந்ததாக சொல்லப்படுகிறது அவர் அதிகமான சம்பளம் கேட்டதால் அஜித் வேண்டாம் என்று முடிவு எடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

 

அதன் பின் யாரை இயக்குனராக நியமிக்கலாம் என்று சொன்ன பொழுது உங்களுடைய நண்பர் வெங்கட் பிரபு இருக்கிறார் அல்லவா என்று சொல்லும் போது திடீரென அஜித் கோவப்பட்டாராம். காரணம் என்னவென்றால் வெங்கட் பிரபுவின் அப்பாவான இசை அமைப்பாளருமான கங்கை அமரன் ஒரு பேட்டியில் மங்காத்தா 2 படம் ரெடி ஆகிவிட்டது. அதில் அஜித் விஜய் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்று பொய்யான தகவல்களை சொல்லியுள்ளார். அதனால் அஜித் கோபமாக இருப்பதாகவும் அதனால் வேண்டாம் என்று முடிவு எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

அதன்பின் மகிழ் திருமேனி அவர்களை இயக்குனராக நியமித்த படம் நன்றாக எடுத்து வருகின்றனர். அவருடைய வேலை அஜித்திற்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது . விடா முயற்சியை அடுத்த வெற்றிமாறன் படத்திற்குப் பின்பு மறுபடியும் அஜித் மகிழ் திருமேனி இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleகதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!
Next articleதம் அடிப்பவர்களுக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது! Big Boss டைட்டிலுக்கு தகுதியானவர் இவர்தான்