கதை சொல்ல வந்தவர்களை மேடையில் கிண்டல் செய்து பேசிய வடிவேலு!

0
209
#image_title

இன்று மாமன்னன் படத்திற்கு வடிவேலுக்கு விருது கிடைத்துள்ளது. அந்த விருது மேடையில் வடிவேலு பேசிய பேச்சு என்று பேசும் பொருளாக மாறி உள்ளது.

 

மாமன்னன் படத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்தது. உதயநிதி மற்றும் வடிவேலு அவர்கள் நடித்திருந்தனர். வடிவேலு தனது மொத்த திறமையும் அந்த படத்தில் காட்டி இருப்பார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றி பெற்ற விழாவை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில் இவர் பேசிய உள்ளது தான்.

 

மாமன்னன் பட த்திற்கு பின் கதை சொல்ல டைரக்டர்கள் வரும்பொழுது அவர்கள் அனைத்தும் சோகமான படங்களாகவே எடுத்து வருகிறார்கள்.

 

சிவாஜியை ஓகே சொன்ன கதை, உங்களுக்கு பத்து பிள்ளைகள் அதை மறந்து ஊட்டியில் வாழ்கிறீர்கள் என கதையை ஆரம்பித்தார்கள். கேட்டால் 67, 64 என்று சொல்கிறார்கள் டைரக்டர்கள் வயது என அவர் கிண்டல் செய்தார்.

 

மேலும் டைரக்டர்கள் கதை சொல்ல வரும் பொழுது அவர்கள் அழுகிறார்கள் , என்னப்பா ஏன் அழுகிறாய் என்று கேட்டால், இல்லை இந்த கட்டத்தை என்னால் தாண்ட முடியவில்லை மிகவும் சோகமாக இருக்கிறது என்கிறார்கள், உடனே நான் கதையை சொல்லப்பா என்று சொல்கிறேன். என நகைச்சுவை பாணியில் சொல்கிறார்.

 

இப்போதைக்கு சோகமாக எந்த படங்களும் வேண்டாம். ஒரு ஐந்து வருடமாக கழியட்டும் முதலில் மக்களுக்கு சிரிப்பை தருவோம் என்று சொல்லிவிட்டேன் என்று அவர் மேடையில் பேசினார்.

 

மேலும் மாமன்னன் படம் குறித்து இது மிகவும் நல்ல படம் விருது மற்றும் பாராட்டு அனைத்தும் மாரி செல்வராஜுக்கே போய் சேர வேண்டும் என்று அவரைப் பற்றி கூறினார்.

author avatar
Kowsalya