துணிவு படத்தின் டப்பிங்கில் அஜித்… செட்டில் செய்யப்பட்டதா சம்பள பிரச்சனை?
அஜித் நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வரும் துணிவு படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.
அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை என்றும் அவர் தற்போது அவர் வாரணாசியில் சுற்றுலா சென்றுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின.
மேலும் அவர் டப்பிங் பேசாமல் சுற்றுலா சென்றதற்குக் காரணம் அவருக்கு இன்னும் சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதே காரணம் என்று சொல்லப்பட்டது.ஆனால் இப்போது அஜித் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும் அவர் முழுப் படத்துக்கும் டப்பிங் பேசி முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சம்பள பிர்ச்சனை பேசி முடிக்கப்பட்டு இருக்கும் என சொல்லப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் துணிவு படத்துக்கு போட்டியாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. ஒரே நாளில் இரு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது மிகப்பெரிய அளவில் ஹைப்பை கொடுத்துள்ளது.