அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு!

0
143

அஜித் 61 படத்தில் இணைந்த மிரட்டலான வில்லன் நடிகர்… படப்பிடிப்பில் பங்கேற்பு!

தற்போது H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக கூறுகின்றனர். அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிக மரியாதை கொண்டுள்ளதனால் இந்த தேதியில் தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஒப்புக்கொண்டார். தற்போது அஜித் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதனால்  இப்போது சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் வினோத் படமாக்கி வருகிறார். இந்த காட்சிகளில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடிபகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் வினோத். இந்நிலையில் இந்த படத்தில் புஷ்பா உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துக் கலக்கிய நடிகர் அஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது காட்சிகளில் நடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Previous article“எனக்காக எதுவும் வேணாம்… ரசிகர்கள மனசுல வச்சிக்குங்க” அஜித்தின் அட்வைஸால் விக்கி குஷி!
Next articleபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?