நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

0
130

நார்வேயில் பைக் ரைடு மேற்கொண்டுள்ள அஜித்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

 

 

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்.தமிழ் ரசிகர்களால் தல,அல்டிமேட் ஸ்டார்,ஏகே என்று அழைக்கப்படும் இவர் நடிப்பை தாண்டி பைக் ரைடு மற்றும் கார் ரைடு உள்ளிட்ட பந்தய போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார்.மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக்கில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் பைக் ரைடு மீது அதீத ஆர்வம் உள்ள அஜித் சமீபத்தில் ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற பெயரில் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார்.

 

இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படத்தின் ஷூட்டிங்கின் நடுவில் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் ரைடு மேற்கொண்டார்.மேலும் இந்தியாவின் லடாக்கிலும் பைக் ரைடு செய்தார்.இதனை தொடர்ந்து இவரின் பைக் ரைடு சுற்றுப் பயணத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் ‘ஏகே மோட்டோ ரைடு’ நிறுவனம் இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் இயற்கை சூழல் மிகுந்த சாலைகளில் பயணிக்க விரும்பும் சாகச ஆர்வலர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.மேலும் சாகச பயணம் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு அந்நிறுவனமே சாகச சுற்றுலா சூப்பர் பைக் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்த புதிய முயற்சிக்கு பைக் சாகச பயணர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.இந்நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை மோற்கொண்டுள்ள அஜித் டென்மார்க்,நார்வே,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் இயறக்கை எழில் சூழ்ந்துள்ள சாலைகளில் சக பயணிகளுடன் பைக் ரைடு மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தற்பொழுது நார்வேயில் சுற்று பயணம் செய்து வரும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

 

இதனிடையே’விடாமுயற்சி’ பட ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதால் தனது பயணத்தை அடுத்த வாரத்திற்குள் முடித்து கொண்டு சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleகாங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!
Next articleநெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!