தல அஜித்தின் இந்த ஹிட் படத்தை இயக்கியது காமெடி நடிகர் சிங்கம்புலியா?!

Photo of author

By Parthipan K

காமெடி நடிகர் சிங்கம்புலி முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், மனம்கொத்தி பறவை, தேசிங்குராஜா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தவர். இவரின் நகைச்சுவையான பேச்சும் யதார்த்தமான நடிப்பும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரை அனைவருக்கும் காமெடி நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல இயக்குநரும் கூட.

நடிகர் சிங்கம்புலி பிதாமகன், நான்கடவுள் போன்ற படங்களில் இயக்குநர் பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிதாமகன் படத்துக்கு வசனகர்த்தாவும் இவர்தான்.

அதுமட்டுமில்லாமல் இவர் இரண்டு ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அதுவும் தல அஜித்தை வைத்து ஒரு படமும் சூர்யாவை வைத்து ஒரு படமும் இயக்கியுள்ளார். தல அஜித்தை வைத்து ரெட் திரைப்படத்தை இயக்கியது இவர்தான். சூர்யாவின் மாயாவி படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார்.

அஜித் அல்லது சூர்யா யாரையாவது ஒருவரை வைத்து எதாவது ஒரு படம் இயக்க முடியுமா என பல முன்னனி இயக்குநர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் சிங்கம்புலி இவர்கள் இருவரது படங்களையும் இயக்கியுள்ளார்.