ஜப்பானில் அஜித்!

0
209

ஜப்பானில் அஜித்!

ஹெஸ்.வினோத் இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் – போனி கபூர் – ஹெஸ்.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர்கள் மூவரும் மீண்டும் இணைத்துள்ள படம் வலிமை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு  பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், அந்த சூழ்நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலை நாடெங்கும் மிகத் தீவிரமாக பரவி வந்த காரணத்தால் அதை கட்டுபடுத்த நாடெங்கும் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

இதன் காரணமாக, வலிமை படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தள்ளி வைத்தது. அதன் பிறகு, தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வலிமை திரைப்படம் இந்த மாதம் (பிப்ரவரி) 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள வலிமை திரைப்படம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வலிமை திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ஜப்பானிலும் வலிமை திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜப்பானில் வலிமை திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தற்போதே தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleநீங்க பி.எட் படிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
Next articleகோவை திமுகவின் கோட்டையாக மாறுகிறதா? அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த செந்தில் பாலாஜி!