விஜய்சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.
மேலும் இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் ’லாபம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் ஜனநாதன் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரின் படங்களிலும் விஜய்சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார் என்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர் மோகன் ராஜா மற்றும் விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை கனிகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ‘வரலாறு’ உள்பட ஒருசில தமிழ் திரைப் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படிப்பு முடிந்து விடும் என்றும் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.