மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

0
79
Ajith is secretly working with Modi's friend!! Film industry in horror!!
Ajith is secretly working with Modi's friend!! Film industry in horror!!

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

தென்னிந்தியா திரைப்பட துறையில் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருபவர்  அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆவார். தற்போது தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலை அறவே ஒதுக்க கூடியவர். இவர் இப்படி ஒரு காரியம் செய்துருக்கிறாரா என பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாய் செய்திருக்கும் வேலை தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

சிவாஜி காலகட்டத்தில் பிரபலமானவர் தான் நடிகர் ஜெய்சங்கர். இவருடைய மூத்த மகன் விஜய் சங்கர் ஆவார். கண் மருத்துவராக உள்ள நிலையில் இளையமகன் ஜெய்சங்கர் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

விஜயசங்கரை சினிமாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல எந்த துறையை சேர்ந்தவர்களுக்கும் கண் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இலவசமாக சிகிச்சை செய்து வருகிறார். கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கும் முகாம் மூலம் இலவச சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் இவருடைய மருத்துவமனைக்கு வருபவர்கள் மேல் சிகிச்சைக்காக பணம் இல்லை என்று திரும்பி சென்றால் அவர்களை மீண்டும் அழைத்து சிகிச்சை முதலுதவியை தான் சொந்த செலவிலே இலவசமாக செய்து வருகிறார்.

இதை கேள்விப்பட்ட அஜித் இவரை சந்தித்து இவருடன் பேசி, பழகி, நண்பராக இருந்து வருகிறார். அவர் செய்யும் உதவிகளுக்கு அஜித் தனது பங்கினை சேர்த்து பண உதவிகளை கொடுத்து வருகிறார். எவ்வளவு பணமாக இருந்தாலும் உடனே கேளுங்கள் நான் செய்கிறேன் என அஜித் கூறி வருகிறார். மேலும் நடிகர் விஜய் சங்கரை மோடிக்கும் அறிமுகப்படுத்தினார். இதனால் மோடிக்கும் விஜய் சங்கர் மிகவும் நெருக்கமானவர்.

மோடி சென்னை வந்தாலே இவரை அழைத்து சந்திக்கும் அளவிற்கும் புகழ் பெற்றவர். காரணம் என்னவென்றால் விஜய் சங்கர் செய்யும் உதவி, அவருடன் அஜித்தும் சேர்ந்து பல வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் உதவிகளுக்கும் பணம் கொடுத்து வருவதும் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. நிச்சயம் இந்த ஜென்மத்தில் அஜித் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் வரும் நாட்களில் அவரது முடிவு மாறலாம். மோடியின் நண்பர் விஜய் சங்கருடன் கைகோர்த்து ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாக கண் சிகிச்சை வழங்குவதற்காகவும், கட்டு கட்டாக பணத்தை கணக்கு பார்க்காமல் கொடுக்கும் அஜித்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
Parthipan K