பஸ்ஸை ஓட்டிச் சென்ற அஜித் குமார் !! பஸ்ஸில் மகிழ்ச்சியுடன் பயணித்த ரசிகர்கள் !! ரசிகர்கள் !!

Photo of author

By CineDesk

பஸ்ஸை ஓட்டிச் சென்ற அஜித் குமார் !! பஸ்ஸில் மகிழ்ச்சியுடன் பயணித்த ரசிகர்கள் !! ரசிகர்கள் !!

CineDesk

Updated on:

Ajith Kumar who drove the bus !! Fans who traveled happily on the bus !!

பஸ்ஸை ஓட்டிச் சென்ற அஜித் குமார் !! பஸ்ஸில் மகிழ்ச்சியுடன் பயணித்த ரசிகர்கள் !!

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் முதல் பார்வை வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிட உள்ளது. தற்போது வலிமை படம் குறித்த புதிய தகவல் ஒன்றினை வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித் சூப்பர் கார்களை ஓட்டுவதும் சூப்பர் பைக்குகளை ஓட்டுவதும் நம் அனைவரும் நன்றாக அறிந்தது தான். மேலும் அஜித் குமார்  ஏராளமான ரேஸ் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். இவர் பைக் ரேசராக பல ரசிகர்களுக்கு முன்னுதாரனமாக இருக்கின்றார். இந்நிலையில் வலிமை படத்தில் ஒரு புதிய வாகனத்தை அஜித் ஓட்டி உள்ளார் என்று தயாரிப்பாளரான போனி கபூர் கூறியுள்ளார். நடிகர் அஜித் வில்லன் திரைப்படத்தில் பஸ் டிரைவராக நடித்திருப்பார் அந்த வகையில் தற்போது வலிமை படத்தில் பஸ் ஓட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பேருந்தில் ஒரு சேஸிங் சீன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வலிமை படத்தில் உள்ள மாஸ் சீன்களில் இதுவும் ஒன்று என்றும் தயாரிப்பாளரான போனி கபூர் கூறியுள்ளார். மேலும் அஜித் குமார் பல படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு டூப்  போடாமல் நடித்துள்ளார் அதே போல இந்த வலிமை படத்திலும் பல ரிஸ்க்கான காட்சிகளுக்கு அவர் டூப் போடவில்லை என்றும் கூறி உள்ளார்.