“அஜித் கூட படம் பண்றீங்களா?…” ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

0
193

“அஜித் கூட படம் பண்றீங்களா?…” ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ஸ்ரீகணேஷ்!

இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

8 தோட்டாக்கள் என்ற வெற்றிப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம் 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. மதுரை பின்னணியில் ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாகியிருக்கும் படமாக குருதி ஆட்டம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரீமியர் காட்சி தற்போது திரையுலக பிரபலங்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டு படத்தைப் பார்த்துள்ளார். படம் பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குனர் ஸ்ரீகணேஷ்க்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் ஸ்ரீகணேஷ் அஜித்துக்கு கதை சொல்லியுள்ளதாகவும், விரைவில் படம் அறிவிக்கப்படலாம் எனவும் டிவிட்டரில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதுகுறித்து இப்போது ரசிகரின் கேள்விக்கும் ஸ்ரீகணேஷ் பதிலளித்துள்ளார். அதில் “அது ஒண்ணுமில்ல சகோ, இப்போதைக்கு அது பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீகணேஷின் இந்த மழுப்பலான பதில் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் படத்தில் நடிக்க உள்ளதால், ஒருவேளை ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடித்தாலும், அந்த படம் தொடங்க அடுத்த ஆண்டு ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !.. 
Next articleநின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!