আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

அஜித் லாக்கப் மரணம்.. காணமல் போன ஜெய்பீம் சூர்யா!! DMK வை சப்போர்ட் செய்யும் டாப் நடிகர்கள்!!

By Rupa
Published on: ஜூலை 3, 2025
---Advertisement---
Lockup Death Ajith: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மரண வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் உருவாகியுள்ளது. முதலில் 10 சவரன் நகை திருட்டுக்காக அஜித்குமாரை கைது செய்து விசாரணை செய்ததாக கூறினர். தற்போது அப்படி ஒரு புகார் ஏதும் இல்லை, வெறும் 500 ரூபாய் பேரம் பேசியதற்காக அவரை இந்த பொய் புகாரியின் மூலம் கைது செய்துள்ளனர்.

மேற்கொண்டு அவரை கோவில் பின்புறம் அழைத்து வந்து சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால் அந்தரங்க உறுப்பு என பல இடங்களில் மிளகாய் பொடி தூவி உள்ளதாகவும் கூறுகின்றனர். அதிலும் அஜித்குமார் மீது புகார் தந்த நிகிதா என்ற பெண் தற்போது தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க இதே போல் அதிமுக ஆட்சி காலத்தில் கடைசி ஆண்டில் சாத்தான்குளத்தில் அப்பா மகன் லாக்கப் மரணம் நடைபெற்றது.

இதே போல தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எடப்பாடிக்கு எதிராக குரல் ஓங்கினர். அதிலும் சினிமா துறையிலிருந்து சூர்யா, சித்தார்த், பிரகாஷ்ராஜ் இன்னும் பல நடிகைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திமுக ஆட்சியில் தற்போதும் அதே போல் ஒரு சம்பவம் நடந்திருக்கும் நிலையில் சூர்யா வாய் திறக்கவில்லை. அவர் நடித்த ஜெய் பீம் இதே போல கதையை தழுவி தான் இருக்கும். தற்போது இந்த நடிகர்கலெல்லாம் வாய் திறக்காததால் சினிமா துறை முழுவதும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளதா இவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று கேள்வியை பலரும் முன் வைத்து வருகிறார்கள்.

நடுநிலைவாதிகளாக இருந்திருந்தால் தற்போதும் ஆதரவு தெரிவித்திருப்பார்கள். ஆனால் இவர்களின் இரட்டை வேடமானது இந்த அசம்பாவிதத்தின் மூலம் அம்பலமானதுடன் யாருக்கு எங்களது சப்போர்ட் என்பதையும் இதன் மூலமே வெளி கான்பித்துள்ளனர்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now