லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

Vinoth

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த போது அங்கு லைகா சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் – ஹெச் வினோத் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவே அது வைரலானது. தற்போது இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், அஜித் நடிக்க இருக்கும் 62-வது படம் குறித்த தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருகிறார் என்றும், அந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் லைகா சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அஜித் 62 படம் பற்றி இருவரும் எதுவும் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்து தற்போதுதான் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தின் திரைக்கதை பணிகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.