அஜித் 61 படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான ‘வங்கி’ செட்… இணையத்தில் வெளியான புகைப்படம்!
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் அஜித் சம்மந்தமானக் காட்சிகளை படமாக்கிய ஹெச் வினோத், அவர் ஐரோப்பா சுற்றுலா சென்றதால் சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் படமாக்கினார். இந்த காட்சிகளில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடிபகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் வினோத்.
இதையடுத்து அஜித் தற்போது இந்தியா திரும்பிவிட்ட நிலையில் விரைவில் அவர் சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தில் முக்கியக் காட்சிகளை படமாக்க ஐதராபாத்தில் பேங் செட் ஒன்று போடப்பட்டது. அந்த செட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.