சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித்

0
188

சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித்

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள ’ஹீரோ’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் நடிக்கும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனரின் படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தற்போது தயாரிப்பு தரப்பில் ஒருசில சிக்கல்களில் உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் போனிகபூர் டேக் ஓவர் செய்து தன்னுடைய தயாரிப்பில் தயாரிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித்

போனிகபூர் சமீபத்தில் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்து விட்டு தற்போது அதே அஜித்தின் ’வலிமை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களையும் போனிகபூர் டேக் ஓவர் செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இந்த பேச்சுவார்த்தையின் போது சிவகார்த்திகேயன் குறித்து அஜித் கருத்து கேட்டதாகவும், அஜித், சிவகார்த்திகேயன் குறித்து நல்லவிதமாக கூறியதை அடுத்து, இந்த இரண்டு படங்களையும் போனிகபூர் தயாரிக்க ஒப்புக்கொண்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Previous articleஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த ‘90ML’நடிகை!
Next articleஇந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு எவ்வளவு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here