கார் ரேசிலிருந்து விலகுகிறார் அஜித்!! ரசிகர்கள் பேரதிர்ச்சி!!

0
110
Ajith retires from car racing!! Fans are shocked!!
Ajith retires from car racing!! Fans are shocked!!

ஐரோப்பிய கார் பந்தயமான 24 ஹவர்ஸ் தற்சமயம் துபாயில் நடந்து வருகின்றது. இதில் அஜித் தலைமையிலான அணியானது அஜித் குமார் கார் ரேசிங் என்ற பெயரில் இதில் கலந்து கொண்டுள்ளது. இதற்காக இவர் சொந்த அணியையும் உருவாக்கி, சொந்தமாக போர்ஷே கார்களையும் வாங்கியிருந்தார். இவர் தலைமையிலான அணி வெற்றி பெறுவதைப் பார்க்க இவரின் ரசிகர்கள் துபாய்க்கு படையெடுத்து உள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது கார் ரேசில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் காரணம் தெரியாமல் இவர் ரசிகர்கள் பலரும் என்னவாயிற்று, படம் வெளி வருவதாக இருந்ததும் தள்ளிப் போயிற்று. தற்சமயம் கார் ரேஸில் இருந்து பின்வாங்குகிறாரே என கவலை கொண்டனர். அதற்கு, அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சமீபத்தில் நடந்த விபத்து காரணமாக தனது உடல் முழுமையாக ரெடியாகவில்லை. இந்த போட்டியில் எனது டீம் தொடர்ச்சியாக போட்டியிடும் எனக் கூறியுள்ளார். மேலும், ஐரோப்பிய கார் பந்தயங்களில் இந்த போட்டியில் இருந்து மட்டுமே தான் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தியானது, தற்போது ரசிகர்களால் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் அவரது ரசிகர்கள், உடல் நிலையை சரி செய்து லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார் எனக் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

Previous articleபணத் தட்டுப்பாட்டை சந்திக்க கூடாதா? அப்போ இந்த ஒரு பொருளை தூபத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!
Next articleஇவர் தவெகவா இல்லை திமுகவா!! டபுள் சைடு அலைமோதும் விசிக!!