விஜய்யின் இந்த ஹிட் படம் அஜித்துக்காக எழுதப்பட்டதா?… இயக்குனரே பகிர்ந்த தகவல்!

Photo of author

By Vinoth

விஜய்யின் இந்த ஹிட் படம் அஜித்துக்காக எழுதப்பட்டதா?… இயக்குனரே பகிர்ந்த தகவல்!

விஜய் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமலை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரமணா இயக்கி இருந்தார்.

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டியாளர்களாக கருதப்படுபவர்கள் அஜித்- விஜய். இவர்களின் இருவரும் ரசிகர்களும் அடிக்கடி சமூகவலைதளத்தில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட மாஸ் நடிகர்களாக இப்போது இவர்கள் இருவரும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்துக்காக எழுதப்பட்ட கதை ஒன்று விஜய் நடிப்பில் உருவாகி அந்த படமும் சூப்பர் ஹிட்டும் ஆகியுள்ளது. 2003 ஆம் ஆண்டு கவிதாலயா பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரமணா இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய், ஒரு டூவீலர் மெக்கானிக்காக பைக் ரேஸராக நடித்திருந்தார். இந்த படம்தான் விஜய்யை முழுநேர ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது.

இந்நிலையில் இந்த கதையை அஜித்துக்காகதான் தான் எழுதியதாக தற்போது இயக்குனர் ரமணா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மேலும் அந்த கதையை தான் அஜித்திடம் சொல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். திருமலை வெற்றிக்குப் பின்னர்தான் அஜித்தை சந்தித்த போது இதைக் கூறியதாக தெரிவித்துள்ளார்.  இந்த தகவல் அஜித் விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்போது கவனத்தைப் பெற்றுள்ளது.