அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி

0
159

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி

இப்போதெல்லாம் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஓடிடி நிறுவனங்களும் அந்த படங்களை பெரிய தொகை கொடுத்து வாங்க ஆரம்பிக்கின்றன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து படத்தின் தலைப்பு உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டும் வெளியாக வில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக அஜித்தின் பட பெயர்கள் வீரம், விவேகம், வலிமை என வைக்கப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட அதே பொருள் கொண்ட துணிவு என்ற டைட்டில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திரையரங்க ரிலீஸூக்கு பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் வாரிசு திரைப்பட உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் 67 படம் இன்னும் தொடங்கப்படவே நிலையில் அதையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

Previous articleநாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!
Next articleஇந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!