தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

0
195

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். இதன் மூலம் அவருடைய படங்கள் அனைத்தும் மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது.

“நேர்கொண்ட பார்வை” படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த  வெற்றியினால் அடுத்த படத்தையும் போனி கபூர், அஜித்தைக்கொண்டே உருவாக்கும் முயற்சியில் “வலிமை” என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திலும் வினோத் தான் இயக்குனர்.

கொரோனா பொது முடக்கினால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், போனி கபூர்   வலிமை படத்தினை ஹிந்தியில் “பான் இந்தியா” என்று ரீமேக்  செய்யவிருக்கிறார்.

வலிமை படத்தில், அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் இப்படத்தில் பிரமாண்டமான சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. எனவே வலிமை படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருப்பதாகவும். இப்படம் 2021ல் கோடைகால விடுமுறையில் வெளியிடப் போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Previous articleஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்
Next articleவரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்த ரயில் மற்றும் விமான சேவைகள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here