9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு!

Photo of author

By Vinoth

9 வருடங்களுக்கு ஒரே நாளில் விஜய் அஜித் படங்கள்… பொங்கல் ரேஸில் அஜித் 61 & வாரிசு!

அஜித் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் நடித்து வரும் அஜித் 61 திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரசிகர்களால் மிக அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இந்த இரு படங்களும் தனித்தனி நாளில் ரிலீஸானால் கூட திரையரங்குகள் திருவிழாக் கோலம் காணும். ஒரே நாளில் ரிலீஸானால் எப்படி இருக்கும்.

இப்போது அதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் 61 திரைப்படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிபோக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அநேகமாக பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அதேநாளில்தான் விஜய், வம்சி இயக்கத்தில் நடிக்கும் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு படங்களும் மோதும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு இவர்களின் வீரம்-ஜில்லா ஆகிய திரைப்படங்கள் இதே போல ஒரு பொங்கல் பண்டிகைக்குதான் ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு இவர்களின் ஆழ்வார் மற்றும் போக்கிரி ஆகிய திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்குதான் ரிலீஸாகின. ஆனால் அப்போதைய ரிலீஸ் முறைகளில் இரு படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இப்போது மொத்தமாக அனைத்து திரையரங்குகளிலும் முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீஸாகின்றன. அதனால் இரு சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால் வியாபாரம் பாதிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.