“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

0
151

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நாக சைதன்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்தது. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மாநாடு திரைபடம் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்த படத்தை தமிழில் இயக்காமல் தெலுங்கில் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

இந்நிலையில் அஜித்தை வைத்து மங்காத்தா என்ற படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்த வெங்கட்பிரபு, மீண்டும் அஜித்துடன் எப்போது இணைவார் என்று ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அதே போல அஜித் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து வெங்கட்பிரபு ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் தகவல்கள் அவ்வப்போது பரவி வருகின்றன.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கட்பிரபுவிடம் இதுபற்றி கேட்டபோது “அஜித் விஜய் இருவரும் இணைந்து என் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தால் அதை இயக்க நான் இயக்க தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அஜித்தும் விஜய்யும் சம்மதிப்பார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Previous article“எதாவது மருந்து கொடுத்து என்ன விளையாட வையுங்க…” போட்டிக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூர்யகுமார்
Next article27-9-2022- இன்றைய ராசி பலன்கள்!