அஜித்தை வாழ்த்தியது இதற்குத்தானா!! திமுக கையில் எடுத்த அரசியல் யுக்தி!!

0
264
Ajith was congratulated for this!! Political strategy taken by DMK!!
Ajith was congratulated for this!! Political strategy taken by DMK!!

Politics: நடிகர் விஜய் அரசியல் வந்த நிலையில் உதயநிதி நடிகர் அஜித்-க்கு அவர் கணக்கில் பதிவிட்ட போஸ்ட்க்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பின் வேறு காரணம் இருக்கிறது என பலராலும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நிலையில் பல பேர் காதில் கதறல் சத்தம் கேட்கிறது என அவரது தொண்டர்கள் கூறுகின்றனர். அதை தொடர்ந்து நடந்து முடிந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்து இருந்தார். அதில் “ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம்” என்றும் பெரியார் கொள்கை தலைவர் என்றவுடன் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து  ஒரு குரூப் கிளம்பி இருப்பார்கள் என கூறியிருந்தார்.

அதை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் திமுக ஒரு வேளை செய்துள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் அஜித் பற்றி ஒரு போஸ்ட்க்கு, உலக அளவில் சிறப்புக்குறிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள  நடிகரும், எனது நண்பருமான திரு.அஜித் குமார் சார் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

அது மட்டும் அல்லாமல்  நம்முடைய @sports TN LOGO-வை தனது ரேசிங் மற்றும் கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தியதற்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்து, இது தமிழ்நாடு விளையாட்டு துறை உலக அரங்கில் பெருமை படுத்தியதற்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் #FORMULA4 CHENNAI RACING STREET CIRCUIT போட்டிக்கு மறைமுகமாக சில உதவிகளை செய்து உள்ளார். அவரின் இந்த உதவிக்கு எல்லாம் கைமாறாக அஜித்தை பாராட்டி உள்ளார் எனவும், அது மட்டும் அல்லாமல் இதற்கு பின் பல அரசியல் காரணங்களும் உள்ளது என பலராலும் கூறப்படுகிறது.

Previous articleமுஸ்லீம்கள் முழு எதிர்ப்பு.. இதை மட்டும் விஜய் செய்யாமலிருந்தால் கட்டாயம் எங்களது ஆதரவு கிடைக்காது!!
Next articleதவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக ஆதரவு!! ஆட்சியில் பங்கு குறித்து பேசிய கருத்துக்கு விஜய பிரபாகரன்!!