அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

0
94

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

கடந்த மூன்று வருடங்களாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வருகிற 24-ந் தேதியன்று வெளியாக உள்ளது.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அஜித்தின் ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது. இதனால் ‘வலிமை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

‘வலிமை’ படம் தொடர்பாக எச்.வினோத் அளித்த பேட்டியில், ‘வலிமை’ குடும்ப பொழுதுபோக்கு கொண்ட படமாகும். இந்த படம் சமூக பிரச்சனைகளை பற்றியும் பேசுகிறது. இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்கிறார் படத்தின் இயக்குனர் எச்.வினோத்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா ஊரடங்கு தங்கள் திட்டங்களை சீர்குலைத்தாலும், இதன் மூலம் சில நன்மைகளும் நடந்துள்ளதாக கூறுகிறார் இயக்குனர் எச்.வினோத். அந்த வகையில், படத்தை நாங்கள் தீபாவளிக்கு வெளியிட விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை.

பிறகு, டிசம்பர் அல்லது பொங்கல் பண்டிகையில் வெளியிட நினைத்தோம். அதுவும் நடக்காமல் போனது. ஆனால் இந்த கால தாமதம் மேலும் கூடுதலாக இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட எங்களுக்கு உதவியது என்று அவர் தெரிவித்துள்ளார். அஜித் சார் என்னிடம், இந்தப் படத்தை செய்ததற்காக நான் பெருமைபடுகிறேன் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K