தீயாய் பைக்கில் பறந்த தல அஜித்! விழுந்து விழுந்து தேடும் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

தீயாய் பைக்கில் பறந்த தல அஜித்! விழுந்து விழுந்து தேடும் ரசிகர்கள்!

Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் தல அஜித்.  இவர்  நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவது நாமறிந்ததே.

தற்போது தல அஜித் பற்றி ஒரு முக்கியமான விஷயம் சமூக வலைத்தளத்தில்  வைரலாக பரவி வருகிறது.

அதாவது தல அஜித் பைக்கிலேயே இந்தியாவின் கிழக்கு எல்லையான ஒடிசா வரை பைக்கிலேயே சென்று வந்திருக்கிறாராம்.

ஏற்கனவே தல அஜித்திற்கு  துப்பாக்கி சுடுதல் பைக் ரேஸ் கார் ரேஸ் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் இருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில்தான் பைக்கிலேயே ஒடிசா வரை  தன்னுடைய நண்பரோடு சென்று வந்திருக்கிறார்  அஜித். 

இந்த செய்தி அவருடைய ரசிகர்களால் அதிகளவு சேர் செய்யப்பட்டு வருவதோடு, பைக்கில் தல அஜித் சென்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் விழுந்து விழுந்து தேடி வருகின்றனர்.