தீவிரவாதிகள் சுடுவது தெரியாமல் ஜிப்லைனில் செல்லும் சுற்றுலா பயணி!.. அதிர்ச்சி வீடியோ!..

0
9
video

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பகல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அது பற்றி தெரியாமல் சுற்றுலாப்பயணி ஜிப்லைனில் சென்ற படியே செல்பி வீடியோ எடுத்திருக்க்கிறார். அந்த வீடியோவில் தீவிரவாதிகள் சுட்டதில் ஒருவர் குண்டடி பட்டு கீழே விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. தற்போது அந்த ஜிப்லைன் ஆப்பரேடருக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரிடம் இது பற்றி அவர்கள் விசாரிக்கவுள்ளனர்.

terrorist

ஏனெனில், அந்த பயணி கொடுத்துள்ள தகவல்படி ‘அந்த ஜிப்லைன் ஆபரேட்டர் மூன்று முறை அல்லாக்கு அக்பர் என சொன்ன பின்னர்தான் தீவிரவாதிகள் சுட துவங்கினார்கள். என் கண் முன்னே 8 பேர் இறந்துபோனர்கள். அந்த ஆபரேட்டர் சாதாரணமாக இருந்தார் என சொல்லியிருக்கிறார். எனவே, அந்த ஜிப்லைன் ஆபரேட்டர் தீவிராவதிகளுக்கு உதவி இருக்கிறாரா என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

Picture and Video courtesy to Spark Media

Previous articleபல ஆண்டுக்குப் பின் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு!! நீதிமன்றம் அறிவிப்பு!!
Next article12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலை!! எழுத்து தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்க!!