DMK: திருபுவனம் மடப்புரம் கோவிலுக்கு வந்திருந்த நிகிதா தனது நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஜித் குமாரை தாக்கிய வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விசாரணையை தொடரவே, முதலில் அஜித்குமார் நகையை திருடவில்லை என்றும் அவரது நண்பர்கள் தான் திருடினார்கள் என்று பலவித கோணங்களில் திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் காரில் நகை இருந்ததா என்று கேள்வியும் எழுந்தது?? இப்படி இருக்கவே எதிர் கட்சியினரின் தொடர் போராட்டம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைக்காத திமுக ஆட்சி குறித்தும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதிலிருந்து அவர்கள் பெயரை காப்பாற்றிக் கொள்ள அஜித் குமார் இறந்த போது அவரது தாயாரிடம் திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் பேரம் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது.
திருப்புவனம் அஜித்குமார் காவல் கொலை வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்.
அஜித்குமார் உடலை வாங்க மறுத்து வந்த சமயத்தில், காவல்துறை அவரது உறவினர்களை மண்டபத்தில் வைத்து “பணம் தருகிறோம்.. போராட வேண்டாம்” என கட்டப்பஞ்சாயத்து செய்ததை அதனை ஊர்மக்கள் படம்பிடித்த போது காவல்துறையினர்… pic.twitter.com/kXG6fBl5gh
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) July 15, 2025
இந்த புகார் ரீதியாக நீதிமன்றமும் விசாரணை செய்தது. இப்படி இருக்கையில் தற்போது அஜித் குமார் உடலை வாங்குமாறு திமுக நிர்வாகிகள் மற்றும் போலீசார் பேரம் பேசிய வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் அழுத்தம் கொடுத்து சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றவில்லை என்றால் கட்டாயம் மற்ற லாக்கப் மரணம் போல் இதுவும் நீர்த்துப் போகத்தான் செய்திருக்கும்.