அட்டு பிளாப் ஆன “விவேகம்”! ரசிகர்களின் சாடலுக்கு மத்தியில் அஜித் செய்த செயல்!!

Photo of author

By Divya

அட்டு பிளாப் ஆன “விவேகம்”! ரசிகர்களின் சாடலுக்கு மத்தியில் அஜித் செய்த செயல்!!

கோலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் அஜித்.இவர் அமராவதி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பின்னர் அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டார்.

முதலில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித் பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தி தல,அல்டிமேட் என்று ரசிகர்கள் பாசமாக கூறும் அளவிற்கு அவர்களின் அன்பை பெற்றார்.கோலிவுட்டில் அறிமுகமானது முதல் இன்றுவரை அஜித் நடித்த பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளது.

அதேபோல் அஜித்தின் சில படங்கள் பிளாப் ஆகியும் இருக்கு.ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடித்த அஜித் அவர்கள் தனது கடின உழைப்பால் இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருகிறார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் படத்திற்கான நஷ்டத்தை திரையரங்கு உரிமையாளர்களிடம் கொடுத்துவிடுவது வழக்கமான ஒன்று தான்.இந்த வரிசையில் ரஜினி,கமல்,விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அடங்குவர்.

ஆனால் இந்த மாஸ் ஹீரோக்களில் அஜித் சற்று வித்தியாசமானவர் என்று தமிழ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

அஜித்,காஜல் அகர்வால்,அக்ஷரா ஹாசன்,விவேக் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம்.இப்படத்தின் டீசர்,ட்ரெய்லர் ஏ.கே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்திய போதிலும் படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது.

தமிழ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் கூறியது:

விவேகம் படத்தால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.படம் வெளியான இரண்டாவது நாளிலேயே வசூலில் கடுமையாக அடி வாங்கியது என்று நான் ஓப்பனாக பேட்டி கொடுத்தேன்.இதனால் அஜித்தின் தீவிர ரசிகர்கள் தன்னை கடுமையாக திட்டி விமர்சித்தார்கள்.

விவேகம் படத்தின் இழப்பை ஈடுகட்ட அஜித் அவர்கள் குறைந்த பட்ஜெட்டில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து கொடுத்தார்.இப்படம் 2019 ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக கொண்டாடப்பட்டது.விஸ்வாசம் படத்தின் மூலம் விவேகம் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை அஜித் ஈடுகட்டினார்.இதனால் தான் அஜித் அல்டிமேட் என்று அழைக்கப்படுகிறார் என்று ஸ்ரீதர் கூறி இருக்கிறார்.