ரேசில் கலந்து கொள்ளும் அஜித்தின் போர்சி கார்!! வைரலாகும் அவரின் புகைபடம்!!

Photo of author

By Vinoth

ரேசில் கலந்து கொள்ளும் அஜித்தின் போர்சி கார்!! வைரலாகும் அவரின் புகைபடம்!!

Vinoth

Updated on:

Ajith's Porsche car to race!! His photo is going viral!!

நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி” நடித்து வருகிறார்.  இந்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும்  கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் பல சவாலான போட்டிகளில் கலந்து இருக்கிறார். அந்த வகையில் துபாயில் நடைபெற உள்ள 24H கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவரது போர்சி கார் தயாராகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடக்கவுள்ள ஜிடி4 சாம்பியன்ஷிப்பிலும் அஜித் தனது குழு உடன் பங்கு பெற இருக்கிறார். அஜித்தின் இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மேலும் அவரது படங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வருட பொங்கலுக்கு குட் பேட் அக்லி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.