ஊரெங்கும் அஜித் கோஷம்.. ஆனால் அவரோ!! அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள்!!

0
16
Ajith's slogans are everywhere.. but who is he!! Officially, it's just another day!!
Ajith's slogans are everywhere.. but who is he!! Officially, it's just another day!!

இன்று அஜித் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி திரைப்படமானது இந்தியாவில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இணையதளம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கக்கூடிய அஜித்தின் திரைப்படம் குறித்தும் திரைப்படத்தில் அஜித்தின் உடைய நடிப்பு குறித்தும் செய்திகள் வைரலான வண்ணம் உள்ளன. ஆனால் நடிகர் அஜித் அவர்களே மிகவும் சாதாரண நாளாகவே இன்றைய நாளை கழித்து வருகிறார்.

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் அஜித் அவர்கள் ” அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள் ” எனக் குறிப்பிட்டு தன்னுடைய ரேசிங் காரை சரி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ஒருவர் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடியுமா என்பது போல ரசிகர்களை ஆச்சரிய முடிவு செய்வதாக இந்த செயல் உள்ளது

ரசிகர்கள் நடிகர் அஜித்தின் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் அஜித் அவர்கள் தனக்கு மிகவும் பிடித்த ரேசிங் துறையில் தன்னுடைய ரேசிங் காரை சரி செய்வது குறித்த முக்கிய பணியில் இன்றைய நாளை கழித்து இருப்பது மற்றும் இன்றைய நாளை தன்னுடைய மிகப்பெரிய நாளாக நினைக்காமல் எப்பொழுதும் போல இதுவும் ஒரு நாள் என்பது போல தன்னுடைய இயல்பான பணிகளை அவர் மேற்கொண்டு இருப்பது ரசிகர்களை இன்னும் அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

Previous articleபணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!
Next articleவருகிற 12ம் தேதி தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!.. அது யாருன்னு தெரியுமா?…