வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Photo of author

By Anand

வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Anand

Akash Prime missile

வானிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

DRDO என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது.

நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.இந்த சோதனையின் போது குறிப்பிட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.இதனையடுத்து இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.