ஆந்திராவில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை தாக்கிய நிர்வாண பெண் அகோரி!!

Photo of author

By Vinoth

ஆந்திர மாநிலம் மங்கலகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ நகருக்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் அகோரி ஒருவர் நிர்வாண நிலையில் காரில் வந்து இறங்கினார். மேலும் அங்குள்ள வாட்டர் சர்வீஸ் மையத்திற்கு வந்து  தனது காரை வாட்டர் செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த அகோரி நிர்வாண நிலையில் உள்ளதாக தகவல் அப்பகுதியில் பரவியது. அந்த அகோரியை காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர்.

அப்போது சில அவரை தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். இதனை கண்டு பெண் அகோரி தன்னிடமிருந்த திரிசூலத்தை மூலம் பொதுமக்களே விரட்டி விரட்டி தாக்கினார். இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பல தேசிய நெடுஞ்சாலை உள்ள டிவிடரில் மற்றும் செடிகள் மீது விழுந்து காயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தை அறிந்த மங்களகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பெண் அகோரியை போலிஸ் சமாதானப்படுத்து சென்ற போது அவர்களையும் தாக்கியுள்ளார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் என 4 பேர் காயம் அடைந்தனர். ஒரு வழியாக பெண் அகோரியை மடக்கி பிடித்து அவரிடம் இருந்து திரிசூலத்தை பறிமுதல் செய்து கட்டி போட்டனர். பெண் அகோரியை துணியை எடுத்து அவர் மேல் சுற்றி விட்டனர்.

பின்பு சிறிது நேரம் கழித்து அகோரியை கயிற்றில் இருந்து அவிழ்த்தினார். ஆனால் மீண்டும் பொதுமக்களை தாக்க தொடங்கினார் இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக போலீசார் அகோரி பாதுகாப்புடன் ஆந்திர எல்லையை தாண்டி தெலுங்கானா மாநிலத்தில் விட்டனர். இதனால் விஜயவாடா,ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டது.