மீண்டும் பாலிவுட்டில் ஒரு தோல்வி படமா? அக்ஷய் குமாரின் வசூல் நிலவரம்!
பாலிவுட் சினிமாவுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்துள்ளது. ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பலரின் படங்கள் தொடர்ந்து தோல்விப் படங்களாக அமைந்து வருகின்றன. ஆனால் தென்னிந்தியாவில் இருந்து டப்பிங் ஆகும் படங்கள் அங்கு சக்கை போடு போடுகின்றன. கேஜிஎப் 2, ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா ஆகிய படங்களே சாட்சி.
இதில் பயங்கரமாக ஆட்டம் கண்டது அக்ஷய் குமாரின் படங்கள்தான். வரிசையாக அவரின் படங்கள் தோல்வி அடைந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ரிலீஸான அக்ஷய்குமாரின் ராம்சேது திரைப்படம் நல்ல ஓப்பனிங்கை கொடுத்தாலும், அதன் பின்னர் அந்த வசூல் நிலைக்கவில்லை. இதனால் பாலிவுட்டின் மற்றொரு தோல்விப்பட லிஸ்ட்டில் இந்த படமும் இணைந்துள்ளது. ஒரு வாரத்தில் இந்த படம் 56 கோடி ரூபாய் மட்டுமே வசூலாக ஈட்டியுள்ளதாம். இத்தனைக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 156 கோடி ரூபாய்.
அக்ஷய் குமார் நடித்தா பிருத்விராஜ் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை ஏமாற்றி தோல்விப் படமாக அமைந்தன. அக்ஷய் குமார், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சுரரைப் போற்று திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் அவரது மார்க்கெட்டை மீண்டும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு தமிழில் இசையமைத்த ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார். சூரரைப் போற்று திரைப்படம் பல பிரிவுகளில் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.