அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு.
இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது.
20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிக்கை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த அட்சய திருதியை நாளுக்கு சிறப்பு விற்பனையை அறிவிக்கும். ஆனால் தற்போது எலட்க்ரானிக்ஸ் முதல் ரியல் எஸ்டேட் வரையில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான அட்ச திருதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7-49 மணிக்கு தொடங்கி, இன்று காலை 7-47 மணிக்கு முடிவடைந்தது. இந்த நல்ல நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த அட்ச திருதியை முன்னிட்டு சென்னை தங்கம் – வெள்ளி நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெற்றுள்ளது.
மக்கள் ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் நகைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர், நகைகள் முன்பதிவும் ஜோராக நடந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று 18 டன் அளவில், அதாவது 9 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனை நடந்தது. இந்த ஆண்டு நகைகள் விற்பனை 20 சதவீதம் கூடுதலாக நடந்துள்ளது. முன்பதிவும் 25 சதவீதம் கூடுதலாகவே நடந்திருப்பதாக தெரிவித்தார்.
எனினும் அட்ச திருதியை தங்க வெள்ளி நகை விற்பனை விபரம், இன்று திங்கட்கிழமை மாலை அல்லது நாளை செவ்வாய்க்கிழமை தெரியும் என கூறப்படுகிறது.