மனைவிக்காக விலை உயர்ந்த காதணியை பரிசாகக் கொடுத்த பிரபல நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’என்ற படத்தில் வில்லனாகவும் பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாகவும் நடித்து வரும் அக்ஷய் குமார் தனது மனைவிக்காக விலையுயர்ந்த காதணி ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அந்த காதலை என்னவெனில் வெங்காயத்தில் செய்யப்பட்ட காதணி என்பதுதான் அதன் சிறப்பு.
வெங்காயத்தின் விலை தற்போது விஷம் போல் ஏறி கொண்டிருக்கும் நிலையில் வெங்காயத்தை வைத்து பல்வேறு ஜோக்குகள், மீம்ஸ்கள் ஆகியவை வைரலாகி வருகிறது. திருமணத்திற்குக் கூட ஒரு கிலோ வெங்காயத்தை பரிசு கொடுக்கும் நிகழ்வுகளும் நடந்து வந்தன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வெங்காயத்தில் காதணி செய்து தனது மனைவிக்கு பரிசு கொடுத்தால் அதுதான் உலகிலேயே காஸ்ட்லியான காதணி ஆக இருக்கும் என நினைத்து அக்சய்குமார் வெங்காய காதணியை தனது மனைவிக்கு கேட்டு வாங்கி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அக்ஷய்குமார் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கன்னா தனது இன்ஸ்டாகிராம் கூறியதாவது: என் கணவர் எனக்காக இந்த வெங்காய காதணியை பரிசாக வாங்கி வந்துள்ளார். முதலில் கபில் சர்மா நிகழ்ச்சியில் கரீனாகபூருக்கு இதேபோல் ஒரு காதணி வழங்கப்பட்டது.
எனது கணவர் பெரிதும் விரும்பவில்லை என்றாலும் எனக்கு இந்த விஷயம் ரொம்ப பிடிக்கும் என நினைத்து அக்ஷய்குமார் எனக்காக வெங்காய காதணி வாங்கி வந்துள்ளார். சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் மனதை கவரலாம்’ என்று கூறியுள்ளார். அக்ஷய் குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணி கொடுத்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பரவி வருகிறது.