அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! 20க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு!

0
160

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்றைய தினம் காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்றது கோட்டை முனியசாமி வாடிவாசல் திடலில் நடைபெற்ற இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டசபை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி திருக்கோவில் காளை, கருப்புசாமி கோவில் காளை, வலசை கருப்பசாமி கோவில் காளை, உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஆனால் இந்த காளைகளை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை இதனைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஒட்டுமொத்தமாக சற்றேறக்குறைய ஆயிரம் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என்ற எண்ணிக்கையில் 8 சுற்றுக்கள் நடைபெற்றன.

இந்த போட்டியில் பங்கேற்று கொண்ட வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தலா ஒரு தங்கக்காசு பரிசாக கொடுக்கப்பட்டது. இதை தவிர்த்து வெள்ளிக்காசுகள், இருசக்கர வாகனங்கள், பீரோக்கள் சைக்கிள்கள் மோதிரம் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதேபோல போட்டியின் இறுதிக்கட்டத்தில் 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சட்டசபை உறுப்பினர் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சரின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லுரை சார்ந்த ராம்குமார் என்பவர் இரண்டாவது பரிசைப் பெற்றுக் கொண்டார், சிதங்குடி கோபாலகிருஷ்ணன் 3 காளைகளை அடக்கி 3வது பரிசை தட்டிச் சென்றார், இவர்கள் இருவருக்கும் இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

Previous articleகுடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளின் அனுமதி மறுப்பு ஏன்? உண்மையான காரணம் இதோ!
Next articleஇந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!