இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

இந்த மாவட்டங்களில் திருவிழாக்கள் நடத்த தடை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் மற்றும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஒமைக்ரான் பரவல் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

அதிகரித்துவரும் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி உள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் தொற்று பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது அமலில் உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இந்த மாதம் 3-ஆம் தேதி  தொடங்கியது. அதை தொடர்ந்து 60 வயதைக் கடந்த முதியவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. ஒமைக்ரான் பரவல் தற்போது நாட்டில் அதிகரித்துள்ளதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ம் நாள் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆற்று கரையோரப்பகுதிகளிலும் இன்று நடைபெறுவதாக இருந்த ஆற்றுத் திருவிழாவுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா நடத்த தடைவிதித்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.