மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர், ஆகியோர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்.
தமிழர்களுடைய மிக முக்கிய பண்டிகையான,பொங்கல் பண்டிகையின் பொழுது தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. ஜல்லிக்கட்டு போட்டியானது, அலங்காநல்லூர், பாலமேடு அவனியாபுரம், போன்ற இடங்களில் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த நிலையிலே, இந்த வருடம் கொரோனா காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனாலும் தமிழக அரசு அன்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக, வீரர்கள் மாடுகளை தயார் செய்து வருகிறார்கள். வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்தில், மற்றும் 15 ஆம் தேதி பாலமேட்டில், 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியிலே 300 வீரர்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள் என்றும், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையிலே, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க இருப்பதாக, அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் ஆர். பி. உதயகுமார் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர், ஆகியோர் தொடங்கி வைக்க இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.