ஐயையோ ரேசன் அட்டைதாரர்கள் இதை செய்யவில்லை என்றால் இனி பொருட்கள் வாங்க முடியாதாம்!! டைம் இல்லை உடனே முடிச்சிடுங்க!!
நம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு ரேசன் கார்டு முக்கிய அடையாள ஆவணமாக இருக்கிறது.இந்திய குடிமகன் என்பதற்கு சான்றாக ரேசன் அட்டை உள்ளது.மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேசன் கார்டு தேவைப்படுகிறது.
குறிப்பாக நியாயவிலை கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் இலவச அரசி,கோதுமை,மலிவு விலையில் எண்ணெய்,பருப்பு,சர்க்கரை ஆகியவற்றை பெற ரேசன் கார்டு அவசியமாகும்.இந்த மலிவு விலை ரேசன் பொருட்களால் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.அது மட்டுமின்றி தமிழகத்தில் தீபாவளி பொங்கல் பரிசுத் தொகுப்பு,குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதால் புதிதாக திருமணமானவர்கள்,இதுவரை ரேசன் கார்டு இல்லாதவர்கள் புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ரேசன் கார்டின் EKYC சரிபார்த்து முடிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.ரேசன் கார்டில் EKYC சரிபார்ப்பு பணியை முடிக்காதவர்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படாது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் EKYC முடிக்க இந்த ஜூலை மாதத்தின் கடைசி தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.EKYC முடிக்காதவர்களின் ரேசன் கார்டுகள் செல்லாது என்று சொல்லப்படுகிறது.ஆகவே ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் EKYC சரிபார்ப்பு பணியை உடனடியாக செய்து முடிப்பது நல்லது.இதை செய்யவில்லை என்றால் ரேசன் கடைகள் மூலம்
எந்த பொருட்களும் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.