மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது அனைத்து இடங்களிலும் நடத்தப்படும்.அதிலும் குறிப்பாக மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் போன்ற இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக கூறப்படுகின்றது.
நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிவிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களான பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 16 டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி முழுவதும் ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தையொட்டி இறைச்சி கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளார் அந்த உத்தரவில் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் , மூட உத்தரவிட்டுள்ளார்.
இந்தியத் தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்,மதுக்கூடங்கள் என அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தல் ,மதுபான கடைகள் திறந்தாள் கடையின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.