10 12th Result: தமிழகத்தில் வருடம் தோறும் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான முடிவுகள் வெளியாவது குறித்து தகவல் கசிந்துள்ளது. இம்முறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வானது 3,78,545 மாணவர்களும், 4,24,23 மாணவிகளும், தனித் தேர்வாளர்கள் 18,344 பேர் என மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இதேபோல பத்தாம் வகுப்பு மாணவர் மாணவியர் தனி தேர்வாளர்கள் கைதிகள் என அனைவரும் சேர்த்து 9,13,36 பேர் எழுதியுள்ளனர். இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் மூன்றாம் தேதியே தொடங்கிவிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து பத்தாம் வகுப்பிற்கு தேர்வு ஆரம்பித்தது.
இவர்களின் தேர்வு முடிவானது இம்மாதம் 11ஆம் தேதிக்குள் வெளியாகும் என கூறி வருகின்றனர். அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தப்பட்டு விட்டதாகவும், அதன் மதிப்பெண்கள் இணையத்தில் இணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். கிட்டத்தட்ட வரும் வாரத்திற்குள் இதன் இறுதி முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
அதிலும் கடந்த முறை பொதுத் தேர்வு மதிப்பெண் வெளியீடானது குறிப்பாக 12ஆம் வகுப்பு முடிவு மே 6 ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு முடிவானது மே 1௦ ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இம்முறை பத்தாம் தேதிக்கு மேல் வெளியிடப்படலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் மாணவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு tnresults.nic.in சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.