Alert: இன்றே இதற்கு கடைசி நாள்!!
இந்த ஆண்டிற்கான 2022 -2023-கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப திருத்தம் மற்றும் விண்ணப்ப நகல் பெற கால அவகாசம் மூன்று நாட்கள் நீட்டிப்பு.
இந்த ஆண்டிற்கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கால்நடை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய, மற்றும் சான்றிதழ் நகல் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பினை அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்டது.இதற்கு கடைசி நாளான இன்று,இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.