பிரதமரின் அதிரடி உத்தரவு! அனைத்து அமைச்சர்களும் தமிழகம் வருவார்கள் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Photo of author

By Sakthi

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் முயற்சிகளில் அந்த கட்சி ஈடுபட்டு வருகிறது.

அந்த கட்சியின் இந்த முயற்சிக்கு அளவில் பலன் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பிறகு தமிழகத்தில் பாஜக மெல்ல, மெல்ல காலூன்றத் தொடங்கியது.

அதிலும் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பிறகு அந்த கட்சி தமிழகத்தில் வேகவேகமாக வளர தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும். நாள்தோறும் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கும் பேட்டிகளிலும் அவர் விடும் அறிக்கைகளின் மூலமாகவும் ஆளும் கட்சியை சற்றே திக்கு முக்காட வைக்கிறார். இதனால் தமிழக அரசுக்கு தமிழக பாஜக சிம்ம சொப்பனமாக தான் திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இந்த விழாவில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அனைத்து மத்திய அமைச்சர்களையும் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைவதை கண்காணிக்க 76 அமைச்சர்களும் ஒரு மாதத்திற்குள் தமிழகத்திற்கு வருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார் மத்திய அரசு வழங்கும் பணத்தை சரியாக செலவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்வதற்காக அவர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் அரசு தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதில் மாதத்திற்கு 42 ரூபாய் செலுத்தினால் 60 வருடங்களுக்குப் பிறகு மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் முதலில் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. தற்போது ஆண்களுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு E-shram என்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட அட்டை வழங்குவது என்று 7 திட்டங்களை தொடங்கி வைத்தார்.