உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்ட பிரிவு 142 இன் கீழ் தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி 2014 திருத்தங்களுக்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட இபிஎப்ஓ ஓய்வூதிய கவரேஜை தேர்வு செய்யாத தகுதியுள்ள ஊழியர்கள் எல்லோருக்கும் நான்கு மாதங்களில் பதிவு செய்து அதன் பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த சர்ச்சை முதன்மையாக இபிஎஸ் 1995 இன் பதினோராவது பிரிவில் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள நிர்ணயம் தொடர்பாக 2014 திருத்தங்களை ரத்து செய்த கேரளா ராஜஸ்தான் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களின் முடிவுகளை எதிர்த்து இபிஎப்ஓ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஆரம்பமானது.
2014 இல் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் நவம்பர் மாதம் 16ஆம் தேதி 1995இல் 1952 ஆம் ஆண்டின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினரான ஒவ்வொரு பணியாளரும் பணியாளர் பென்ஷன் பெறலாம் அதில் அதிகபட்சமாக 6500 எனும் வரம்பை மீறி சம்பளம் பெறும் உறுப்பினர்கள் தங்களுடைய முதலாளிகளுடன் சேர்ந்து ஓய்வூதிய நிதியில் தங்கள் சம்பளத்தில் 8.33% வரையில் பங்களிக்க தேர்வு செய்யலாம்.
இபிஎஸ் 2014 திருத்தங்கள் சம்பள வரம்பை 6500 லிருந்து 15,000 ஆக அதிகரித்தது செப்டம்பர் மாதம் 2014 அன்று இபிஎஸ் உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மட்டுமே அவர்களின் சம்பவத்திற்கு ஏற்ற ஓய்வூதிய நிதிக்கு தொடர்ந்து பங்களிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டது அதோட அவர்கள் புதிய ஓய்வூதிய முறையை தேர்வு செய்ய அவர்களுக்கு 6மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
15 000 ரூபாயை கடந்த ஊழியர்கள் அவர்களுடைய மாத ஊதியத்தில் 1.16% கூடுதலாக ஓய்வூதியத் திட்டத்தில் மாதம் தோறும் பங்களிக்க வேண்டும். என்ற நிபந்தனைகளையும் விதித்திருந்தது. அந்த நிபந்தனையை தற்போது நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.
திருத்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் கூடுதல் பங்களிப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்டம் 1952 இன் விதிகளுக்கு எதிரானது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தெரிவித்தது. அத்துடன் இந்த கூடுதல் பங்களிப்பை ஆறு மாதங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களில் கட் ஆப் தேதியையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக ஆர்சி குப்தா வழக்கை குறிப்பிட்டு இபிஎஸ் 1995 போன்ற நன்மை தரும் திட்டம் கடந்த செப்.1.2014 போன்ற கட் ஆப் தேதியை குறிப்பிடுவதன் மூலமாக முறியடிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனக்கூறி அனைத்து நபர்களும் இபிஎஸ் தேர்ந்தெடுக்க தகுதியானவர்கள் என தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு.
அத்துடன் 2014 திருத்தங்களுக்கு முன்னர் மேம்பட்ட ஓய்வூதியத்தை தேர்வு செய்யாத தகுதியான ஊழியர்களை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் தங்களுடைய முதலாளிகளுடன் கூட்டாக செய்ய அனுமதிக்க அரசியலமைப்பின் 142வது சட்ட பிரிவின் கீழ் நீதிமன்றம் அதன் அசாதாரண அதிகாரங்களை பயன்படுத்தி ஒரு மிக முக்கிய பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ஓய்வூதிய திட்டத்தின் திருத்தங்கள் 1300 நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்ட இ பி எஃப் ஓ பட்டியலில் இருக்கின்ற விலக்கு பெற்ற நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
2014 திருத்தங்கள் சராசரி ஓய்வூதிய சம்பளத்தை கணக்கிடும் காலத்தை பன்னிரண்டு மாதங்களில் இருந்து 60 மாதங்களாக நீடித்தது. அதில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. அத்துடன் செப்டம்பர் மாதம் 1 ,2014க்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்த தீர்ப்பின் பலன்களைத் பெற தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.