காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி அங்கு பதற்றம் நிலவவுது நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் போர் இத்துடன் நிறுத்தப்படுவதாக தாலிபான் அமைப்பு அற்றிவிதுள்ளது.தாலிபான் இனி அங்கு ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமானங்கள் மூலம் பொது மக்கள்,அரசியல்வாதிகள்,தூதுவர்கள் வேறு நாட்டுக்கு கிளம்பி வருகின்றனர்.

இனிமேலும் ஆப்கானிஸ்தானில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவெடுத்து எல்லோரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.மேலும் காபூலில் மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.இந்த சூழலில் திடீரென்று காபூல் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பானது தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் ஆப்கானிஸ்தான் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.இந்நிலையில் பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் பதற்றம் அடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் அதிபர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.இதனால் அங்குள்ள மக்கள் இனி எந்த பாதுகாப்பும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி ஆப்கானிஸ்தான் மக்களின் மனதில் எழுந்துள்ளது.இந்த காலக்கட்டம் ஆப்கான் மக்களுக்கு உண்மையில் மிகவும் சோதனையான காலக்கட்டம் ஆகும்.

தாலிபான்களின் ஆட்சியானது கொடூரமாகவும் வன்முறை நிறைந்ததாகவும் அடக்குமுறையுடனும் இருக்கும்.பெண்கள் தனியே வெளியே செல்லக்கூடாது மற்றும் பெண்கள் படிக்கக் கூடாது என அடக்குமுறைகள் நிகழும்.இதனாலேயே இந்த அமைப்பை உலக நாடுகள் எதிர்த்து வருகிறது.மேலும் தாலிபான் அமைப்பானது அடிப்படைவாத அமைப்பாகும்.இந்த அமைப்பு மிகவும் பழைமை வாதத்தை அடிப்படையாகக் கொண்டது.மக்களின் நலனில் சிறிது அக்கறை காட்டாது.மீண்டும் விமான சேவை தொடங்கப்படுமா என அந்நாட்டு மக்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.